Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது பேய் விரட்டும் திருவிழாவா…? ஒரே இடத்தில் திரண்ட கிராம மக்கள்….!!

பேய் விரட்டும் திருவிழாவை பார்ப்பதற்காக ஏராளமான கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டனர். 

சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினர் ஒரு வாரம் விரதமிருந்து, தங்களது முன்னோர் வடிவமைத்து கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு மேள தாளத்துடன் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு வினோதமான பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வரிசையில் நின்றனர். இதனையடுத்து பூசாரி ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து தலைமுடியை கையில் பிடித்து கொண்டு முறத்தால் அவர்களை 3 முறை அடித்துள்ளார்.

இந்த திருவிழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காலங்கள் மாறினாலும் இந்த கிராமத்தில் பேய்விரட்டும் திருவிழா தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |