Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது…! “பொன்னியின் செல்வன்”…. ஓடிடியில் ரிலீசா…? படக்குழுவினர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளது என்ற வதந்திக்கு மெட்ராஸ் டாக்கீஸ் முற்று புள்ளி வைத்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட பெரும் தொகையை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் பொருட்செலவில் திரையரங்குகளில் வெளியிடவே தயாரித்து வருகிறோம். ஓடிடியில் நேரடி வெளியீடு குறித்த தகவல் அனைத்துமே வதந்தி. மேலும் பிரம்மாண்ட படத்தை திரையரங்குகளில் மக்கள் பார்த்து கொண்டாட வேண்டும் என்றே  நினைக்கின்றோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Categories

Tech |