Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னது…. ரூ.91,000 மின்கட்டணமா…? குறுந்தகவலை பார்த்து “ஷாக்”கான பெண்…. அதிகாரிகள் கூறிய “அந்த” பதில்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது பாத்து(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்துவின் செல்போன் எண்ணிற்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் 91,139 ரூபாய் என இருந்தது. மேலும் வருகிற ஐந்தாம் தேதிக்குள் கடைசி நாள் என குறிப்பிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது உடனடியாக நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார்.

அப்போது வழக்கமாக எனது வீட்டிற்கு 65 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வரும். இரண்டு பல்புகள் மட்டுமே இருக்கும் வீட்டில் எப்படி 91 ஆயிரம் மின் கட்டணம் வரும் என அவர் புலம்பியுள்ளார். அதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் எனக் கூறி அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய சார்பில் முகமதுவின் செல்போன் எண்ணிற்கு மின்கட்டணம் 122 ரூபாய் என குறுந்தகவல் வந்தது.

Categories

Tech |