இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு வைரஸ் தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு ஊசிகள் கண்டறியப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தியாவில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் டோஸ் மற்றும் பிப்ரவரி 15ஆம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா சோதனை எடுத்து பார்த்துள்ளார். அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இச்சம்பவத்தின் மூலம் தடுப்பூசி மீதான நம்பிக்கை அனைவரிடமும் கேள்விக்குறியாகியுள்ளது.