Categories
மாநில செய்திகள்

என்னது…! 3,5,8ம் வகுப்பிற்கும் நுழைவுத் தேர்வா?….. அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!

3,5,8 வகுப்பு என பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்க பார்க்கின்றனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டம் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்படும். பொறியியல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது போல் மூன்றாம் ஆண்டுக்கு புதிய பாடம் திட்டம் கூடிய விரைவில் வரும்.

மேலும் முன்பிருந்த பாடத்திட்டத்திற்கு பதில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றம்  கொண்டுவரப்படுகின்றது. 10, 11, 12 வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படுகின்றது. பொறியியல் கல்லூரிகளுக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 3,5,8ம் வகுப்பு என இன்று பலவற்றில் நுழைவுத் தேர்வை திணிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

Categories

Tech |