5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடவாவி கிணற்றை மீண்டும் புனரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கலவை என்ற ஊர் செல்லும் வழியில் ஐயங்கார் குளம் என்னும் ஒரு திருத்தலம் உள்ளது. மேலும் அங்குள்ள சஞ்சீவிராய் சுவாமி கோயிலை ஒட்டிய பெரிய குளத்தின் அருகே நடவாவி என்ற சிறப்பு மிகுந்த கிணறு ஒன்று உள்ளது. மேலும் இந்த கிணற்றுக்குள் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த படிக்கட்டுகள் வழியே கீழே சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது.
மேலும் இது ஒரு அபூர்வ கட்டமைப்பும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பெரிய கிணற்றில் எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும். ஆனால் சித்ரா பௌர்ணமி அன்றைய நாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி,அன்று மாலை பூமிக்கு அடியில், அதாவது கிணற்றில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜ பெருமாளை எழுந்தருளப் பண்ணுவார்கள்.
இதையடுத்து மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். ஆகவே இந்த 2 நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சாமிகளை தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு கிணற்றில் நீர் ஊற்று பெருக்கெடுத்து மண்டபத்தையும் நிரப்பிவிடும். மேலும் இந்தக் கிணறு அல்லது சாவி போன்ற அமைப்பில் காணப்படும். மேலும் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் இந்த நடவாவி கிணறு கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதையடுத்து கிணற்றின் 3 பக்கங்களும் கருங்கற்களால் அமைந்து, நான்காவது பக்க சுவற்றில் கதவு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. மேலும் கிணற்றின் வெளித்தோற்றத்தில் இருக்க கூடிய கல்மண்டபம் மட்டுமே 5 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் தாங்கி நிற்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் கல்மண்டபத்தில் இருந்து படிக்கட்டுகள் உள்ளே சுமார் 20 அடி உயரத்திற்கு யாரும் கவனிப்பாரற்று கிடப்பதால், மண்மூடி பாதையானது தடைசெய்யப்பட்டுஉள்ளது.மேலும் அழிவின் விளிம்பில் இந்த கிணறானது பரிதாபமாக காட்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கிணற்றை சுற்றி இருக்கக்கூடிய கற்கள் வலுவிழந்து பெயர்ந்து, தரையில் விழுகிறது. எனவே இந்தக் கிணறு போதிய விழிப்புணர்வும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இதே நிலை இன்னும் சில காலம் நீடித்தால், கிணறு முற்றிலுமாய் அழிந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. எனவே பாரம்பரிய வரலாறு சாட்சியமாக விளங்கும் இதனை பாதுகாப்பது அரசின் கடமை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.