இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் 5000 வருடங்களுக்கு முந்தைய மனித எலும்பு ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் இருக்கும் பிரிண்ட்ஃப்ர்ட் என்ற பகுதியின் தேம்ஸ் நதியில் சைமன் ஹன்ட் என்ற கிராபிக் டிசைனர் படகில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அந்த நதிக்கரையில் ஆழம் குறைவான பகுதியில் ஒரு கட்டை கருப்பு நிறத்தில் கிடந்திருக்கிறது. அதை எடுத்துப் பார்த்த பின்பு தான் அது மனித எலும்பு என்று தெரியவந்தது.
உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் எலும்பை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த எலும்பு, கடினமானதாக வித்தியாசமாக இருந்துள்ளது.
எனவே, பரிசோதிக்க ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். பரிசோதனையில் அந்த எலும்பானது, கற்காலத்தின் இறுதி வருடத்தை சேர்ந்தது என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு, சரியாக கிமு 3,516 மற்றும் 3360-ஆம் வருடத்திற்கு இடைப்பட்ட வருட காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.