Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னத்த சொல்றது?’… ஜெய் பீம் படம் குறித்து பார்த்திபன் வெளியிட்ட பதிவு…!!!

பார்த்திபன் ‘ஜெய் பீம்’ படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தை அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஜெய் பீம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம் . அப்படியே சினிமாவையும்… நிறைய காசுக்கும் நல்ல Cause-க்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலகளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கிக் கரைந்தேப் போனேன்.

‘சந்துரு சார்’ -இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை, நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன் . அது இன்று த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துரு சாரை பாராட்ட மெய்சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா & ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |