ஈராக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது குண்டு வெடித்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈராக்கின் கிழக்கு மாநிலமான அன்பரின் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பொது ராணுவ வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பு வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் காரில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட அப்பகுதியில் இருந்த பொது மக்கள் தூக்கியெறிய பட்டனர். அதில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.