ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 மோதலின் தொடக்கப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக மோசமான ஷாட் விளையாடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவுட்டானதற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது கோபத்தைக் காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மற்ற இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டைப் போலவே, இதுவும் ஒரு எட்ஜ் ஆஃப் யுவர் சீட் த்ரில்லர் மேட்ச் தான்.. இதில் இந்தியா துரதிர்ஷ்டவசமாக டாஸை வெல்லவில்லை.. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்றார், அவர் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இந்தியா மொத்தம் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. விராட்டைத் தவிர, தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரது துணை கேஎல் ராகுல் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர்
இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது.. துபாயில் 182 ரன்கள் இலக்கு பாகிஸ்தானுக்கு ஒருபோதும் எளிதானதாக இருக்கப் போவதில்லை, அதுவும் இந்தியாவுக்கு எதிராக, ரவி பிஷ்னோய் வீசிய 4ஆவது ஓவரில் கேப்டன் பாபர் ஆசாம் டக்அவுட் ஆகி வெளியேறிய போது அது மிகவும்பாகிஸ்தானுக்கு சிக்கலானது. கிரிக்கெட் விளையாட்டின் 2 வெள்ளை பந்து வடிவங்களிலும் உலகின் நம்பர் ஒன் பேட்டராக இருக்கும் பாபர், இதுவரை ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆட தவறிவிட்டார். அவர் ஒரு குரூப் ஏ போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10 ரன்கள் எடுத்தார், பின்னர் ஹாங்காங்கிற்கு எதிராக 9 ரன்கள் எடுத்தார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) அவரால் 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பின் பேட்டிங் செய்ய வெளியேறிய ஃபகார் ஜமானும் 15 ரன்கள் எடுத்த நிலையில், விரைவில் பெவிலியன் திரும்பினார். ஆனால் முகமது ரிஸ்வான் ஒரு முனையில் நின்று அஸ்திவாரம் போட்டு நின்றார். அவருக்கு முகமது நவாஸ் கைகொடுத்தார்.. இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து பாபர் அசாம் & கோ இலக்கை நெருங்கினார்கள். ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் அவர்கள் வெளியேறியது ஆட்டத்தில் மற்றொரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. மேலும் இந்தியா மீண்டும் போட்டிக்குள் வந்தது..
ஆனால் இன்னிங்ஸின் 18 வது ஓவரில், ஷார்ட் தேர்ட் மேனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஒரு கேட்சை விட்டார்.. அது ஒரு முக்கியமான திருப்புமுனையாக மாறியது. ஆம், ஆசிஃப் அலி 0 வில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வந்த எளிய கேட்சை அர்ஷ்தீப் சிங் பிடிக்க முயன்றார்.. ஆனால் அது எப்படியோ தவறிவிட்டது. இந்திய கேப்டன் ரோஹித், கேட்ச் டிராப்பில் மகிழ்ச்சியடையவில்லை, ரோஹித் முகம் ஆக்ரோஷமானது.. ரோஹித் சர்மா ஆக்ரோஷப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் ஆசிஃப் அலி மேலும் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் அவரை விக்கெட் எடுத்தார், ஆனால் அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தியாவும் தோற்று விட்டது.. இந்த கேட்சை தவறவிட்டதால் தான் இந்திய அணி தோற்றது என சமூகவலைத்தளங்களில் அர்ஷ்தீப் சிங்கை கடுமையான சொற்களால் இந்திய ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.. அவர் அந்த ஒரு கேட்சை விட்டிருந்தாலுமே 3.5 ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து ஓரளவு சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறார்..
முன்னதாக இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் பண்ட், பாண்டியா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு 15-20 ரன்கள் குறைவு என்பதே உண்மை. அந்த ரன்களை எடுத்திருந்தால் கூட இந்திய அணி வென்றிருக்கும் என்பதே ரசிகர்கள் கருத்து. ஒருவேளை இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் கூட 16-20 ஓவர்களில் 200 ரன்களை தொட்டு இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று பெரும்பாலும் ரசிகர்கள் நினைக்கின்றனர்.. இதனாலே போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் களம் இறங்கிய ரிசப் பண்ட் சொதப்பியதால் ரோஹித் சர்மா கடும் கோபத்திற்கு உள்ளானார்.. நம்பி வாய்ப்பு கொடுத்த ரிசப் பண்ட் ஷதாப் கான் வீசிய 14 வது ஓவரில் தேவையில்லாமல் ஸ்வீட் சாட் ஆடி வழக்கத்தை போல குருட்டுத்தனமாக ஏடாகூடமாக அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கும் பிஸ்தாவான ரிசப் பண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான் பவுடர்களை எல்லாம் அசால்டாக ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து அசத்துபவராக இருக்கிறார்.. அதற்காக டி20 கிரிக்கெட்டில் உள் வட்டத்திற்கு வெளியே நிறைய பீல்டர்கள் நிற்கும் போது தேவையில்லாமல் கண்மூடித்தனமாக அந்த சாட்டை ஆடலாமா என்பதே அனைவரின் கேள்வி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக அடி வரும் பண்ட், இதுவரை 56 டி20 போட்டியில் விளையாடியிருக்கிறார். அதில் ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவிற்கு சிறப்பாக ஆடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
பந்த் 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிவர்ஸ் ஸ்வீப்பில் தனது விக்கெட்டை இழந்ததால் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மகிழ்ச்சியடையவில்லை, மேலும் அவர் வெளியேறிய பிறகு டிரஸ்ஸிங் ரூமிற்கு திரும்பியபோது, அங்கு எதற்காக அந்த ஷாட்டை ஆடினீர்கள் என்று அவரை கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோவில், ரிஷப் பண்ட் ஏன் அந்த ஷாட்டை ஆடினேன் என்று தனது கேப்டனிடம் கூறுகிறார். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத ரோஹித் சர்மா கோபத்தில் இருந்தது பார்க்க முடிகிறது. இன்று சூப்பர் 4ல் இந்தியா – இலங்கை அணி துபாயில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/tariqueSH/status/1566452438470516736
Rohit sharma scolding Rishabh pant after his poor shot selection 🥺#INDvsPAK pic.twitter.com/ZVgBAyOdHT
— Shridas Meena (@ShridasMeena3) September 4, 2022