புஷ்பா படத்தால் கஷ்டமான விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். சமந்தா ஆடிய பாடல் உலகம் முழுக்கெங்கும் பரவியது. புஷ்பா சமீபத்தில் 300 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் சில இடங்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஆந்திர மாநிலத்தில் தான் சில விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
புஷ்பா படம் வெளியான சில வாரங்களிலேயே இந்தியாவில் கொரோனா அதிகரித்ததால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் 50 % இருக்கையுடன் சில மாநிலங்களில் திரையரங்கு செயல்பட அரசு உத்தரவிட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் புஷ்பா படத்தை வெளியிட்ட பல இடங்களில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிட்டிய நிலையில் சில இடங்களில் மட்டும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நஷ்டத்தை படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொண்டு நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.