நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது.
ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 48 பைசா மட்டுமே வசூல் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? என்று கேள்வி எழுந்த நிலையில் இனிவரும் காலங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ரயில் கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.