Categories
உலக செய்திகள்

“என்னமா இப்டி பண்ணிட்ட?”…. ஆடைகளை கிழித்து…. சீன பெண் செய்த வெறிச்செயல்…. காரணம் இதுதானா?!!!!

சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக திருமண ஏற்பாட்டில் நிறுவனத்தில் 550 டாலரை ( இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரம் ) கொடுத்து ஆடையை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் அவருடைய திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. எனவே அந்த பெண் திருமண ஏற்பாட்டு நிறுவனத்துக்கு சென்று தான் கட்டிய தொகையை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் தொகையை திருப்பி தர மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அங்கிருந்த ஆடுகளை கையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு கரகரவென்று கிழித்துள்ளார். அதன்படி சுமார் 32 ஆடைகளை அந்த சீனப்பெண் கிழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்திற்கு சுமார் ரூ.8 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

Categories

Tech |