இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பற்றி நடிகை அஞ்சலி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண். இவரின் அடுத்த படத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த படப்பிடிப்பு குறித்து யாரும் வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நடிகை அஞ்சலி இன்று தனது இணையதள பக்கத்தில் ‘ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டே இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திம் 170 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக திரு. இந்த படத்தை பொலிட்டிக்கல் ஆக்ஷன் திரைப்படமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.