சீனாவில்உள்ள மிருகக்காட்சி சாலையில் நாயை ஓநாய்போல் கட்ட முயன்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் ஹூபே நகரில் சியானிங் பகுதியில் உள்ள சியாங்வூஷன் மிருகக்காட்சி சாலை உள்ளது. இதில் ஓநாய் இருந்த கூண்டில் நாய் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓநாய் போல நாயை காட்ட முயன்றது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, அந்தக் கூண்டில் ஓநாய் இருந்ததென்றும், அது உடல் நல குறைவால் உயிரிழந்ததாகவும் அந்த இடத்தில் நாய் இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த மிருகக்காட்சி சாலைக்கு சென்ற சூ என்பவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் பார்க்க பகிர்ந்துள்ளார். மேலும் இது ஓநாயா ? இல்ல நாயா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.இந்த பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
https://youtu.be/JxLkLiUGC5U