Categories
சினிமா தமிழ் சினிமா

என்னம்மா இதுலாம்?…. இதுக்கு தான் 5 கோடி வாங்குறீயா?…. நயன்தாராவை விளாசிய தயாரிப்பாளர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார். இந்த நிலையில் நயன்தாராவை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சரமாரியாக விளாசியுள்ளார். அதாவது இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.ராஜன், நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் படங்களில் புரமோஷன்களில் பங்கேற்காமல் தவிர்ப்பது ஏன் ? என்று கேள்வி கேட்டு விளாசியுள்ளார்.

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவே அவருடைய படத்தின் எந்த புரமோஷனுக்கு வருவது இல்லை என்று கூறியுள்ளார். நயன்தாராவிடம் இதுபற்றி கேட்டால் இதுபோன்ற விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அனைவரும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எண்ணுவார்கள். ஆனால் படம் வெற்றி பெறாவிட்டால் எனக்கு அது கெட்ட பெயர் ஆகிவிடும் என கூறுகிறார். இதனை விமர்சித்த கே.ராஜா நீ நடித்த படம் தோல்வியை சந்திப்பதற்கு தான் சம்பளம் 5 கோடியை வாங்குறியா? என்று கோவமாக பேசியுள்ளார்.

மேலும் படத்தில் நடிக்கும் போதே அது ஃபெயிலியர் ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் தான் நடிப்பீயா ? அதுவே உங்களுடைய சொந்த தயாரிப்பில் வெளியான நிகழ்ச்சிக்கான “நெற்றிக்கண்” படத்தின் புரமோஷனுக்கு மட்டும் வருகிறாய் இதெல்லாம் கேவலமாக இல்லையா ? என்று நயன்தாராவை விமர்சித்துள்ளார். இவ்வாறு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜா நடிகை நயன்தாராவை கடுமையாக விமர்சிப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |