உத்தரபிரதேசத்தில் ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத சமயத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
உத்திரபிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத சமயத்தில் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் சினிமா பாடலுக்கு நடனமாடியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்ட அந்த ஐந்து உதவி ஆசிரியர்களும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 4 ஆசிரியர்கள் மட்டும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அளித்த பதில் திருப்தி தரும்படி இல்லாததால் வகுப்பில் நடனமாடிய ஆசிரியர்களின் பணி நெறியை மீறிய செயலை கண்டித்து பள்ளிக்கல்வித்துறை அவர்கள் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது