ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் செருவலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரது கிராமத்தில் திடீரென ஆடுகள் இறந்து விடுகின்றன. மேலும் இவருக்கு சொந்தமான 40 ஆடுகளும் இறந்து விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஆடுகள் இறப்பதன் காரணம் தெரியாமல் இருந்தனர். இந்நிலையில்
செருவலிங்கம் முதலமைச்சருக்கு அளித்த புகாரில் பின்வருமாறு கூறியுள்ளார்.
அதாவது எங்களது கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். பலர் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். நானும் 40 ஆடுகளை வளர்த்து வந்தேன். ஆனால் ஆடுகள் அனைத்தும் சில நாட்களாக உயிரிழந்து வருகின்றன. எனது ஆட்டை போலவே பலரின் ஆடுகளும் உயிரிழக்கின்றன.
எனவே கால்நடை மருத்துவர்கள் இறக்கும் தருவாயில் இருக்கும் ஆடுகளை காப்பாற்ற வேண்டும் எனவும், ஆடுகள் இறப்பதன் காரணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் எங்களின் வாழ்வாதாரமான ஆடுகளை இழந்துள்ளதால் தமிழக அரசு சார்பில் எங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் கோரிக்கை அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்த கால்நடை இயக்குனர் சஞ்சீவி நோய் தாக்கி ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறியுள்ளார். அதன்பின் இறக்கும் தருவாயில் இருக்கும் ஆடுகளை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.