சாலையில் தேங்கியுள்ள நீரில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டில் பாட்டுப் பாடி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் அசத்தலாக நடித்தவர் மன்சூர் அலிகான். இவரது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்து காமெடி கதாபாத்திரங்களிலும் கலக்கியவர் . இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலையில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் போட் ஓட்டிக்கொண்டு ஜாலியாக பாட்டு பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘என்னவேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என ஜோராக பாட்டு பாடி போட் ஓட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.