Categories
தேசிய செய்திகள்

“என்னவொரு புத்திசாலித்தனம்” தற்கொலைக்கு முயன்ற தாய்…. நொடிப்பொழுதில் காப்பாற்றிய சிறுவன்…!!!!!

அரியானா மாநிலம், கய்தால் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே தினந்தோறும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அந்தப் பெண் தனது மகன் ராகுலை வெளியே விளையாட அனுப்பிவிட்டு வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ராகுல் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.

அப்போது அவரது தாய் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் கூச்சலிட்டுக் கத்தியும் யாரும் உதவிக்கு வரவில்லை. உடனே புத்திசாலித்தனமான அந்த சிறுவன் தனது கையிலிருந்த செல்போனில் 112 அவசர உதவி எண்ணுக்கு அழைத்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். பிறகு அவசர உதவி சேவை மையத்தில் இருந்தவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

பிறகு 9 நிமிடத்தில் அங்கு வந்த காவல்துறையினர்  வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும் தாயின் உயிரை காப்பாற்றிய சிறுவனுக்கு காவல்துறையினர் ரூ.3 ஆயிரம் பணத்தைப் பரிசாக வழங்கினர். மேலும் ஏதாவது ஆபத்து என்றால் அவசர உதவி எண் 112 ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என தனது பள்ளியில் கற்றுக் கொடுத்தது நினைவிற்கு வந்து உடனே அதை செய்து தனது தாயின் உயிரை காப்பாற்றினேன் என சிறுவன் ராகுல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |