மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகளாக மகாதீர் முகமது(97) என்பவர் பிரதமராக இருந்து வந்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தனது 92 வது வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கின்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து கூட்டணி குழப்பங்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பலமுறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.