Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“என்னாது, அந்த நடிகர் கூடவா நடிக்க போறீங்க..?” தமன்னாவை விளாசும் ரசிகாஸ்….!!!!!

நடிகர் திலீப்புடன் நடிக்க வேண்டாம் என தமன்னாவிடம் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றாராம்.

இத்திரைப்படத்தின் பூஜை கொல்லத்தில் இருக்கும் கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் நடந்தது. மேலும் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தொடங்க உள்ளதாகவும் 130 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் செய்தி வெளியானது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. திலீப்புடன் தமன்னாவை பார்த்த ரசிகர்கள் அவரை தற்பொழுது விளாசி வருகின்றார்கள். ஒரு நடிகையை ஆள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான திலீப்புடன் சேர்ந்து நடிக்க எப்படி ஒப்பு கொண்டீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஆகையால் திலீப்புக்கு ஜோடியாக நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.

Categories

Tech |