பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில், பாலிவுட் சினிமாவில் மட்டுமே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மாடலிங் துறையில் இருக்கும்போது அவர் ஒரு விளம்பர ஷூட்டிங்காக முதன்முதலாக சென்றுள்ளார். அப்போது அவர் முதன்முதலாக வாங்கிய சம்பளம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதாவது வெறும் 1500 ரூபாய் மட்டுமே அந்த விளம்பர சூட்டிங்கில் நடிப்பதற்காக வாங்கியுள்ளார். மேலும் இதை கேள்வி பட்ட ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் அச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.