பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் நிகழ்ச்சிவிட்டு விளங்குவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சென்ற ஐந்து வருடங்களாக பிக்பாக்ஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகின்றது. 2017 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தொகுத்து வழங்குவதனால் இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. இவர் தொகுத்து வழங்கும் முறை தனித்தன்மை வாய்ந்தது. போட்டியாளர்களுக்கு இவரின் மீது பயம் கலந்த மரியாதை உள்ளது. இதனால் அவர் எதைக் கூறினாலும் மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக் கொள்வார்கள்.
இந்நிலையில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் இனி பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப் போவதில்லையாம். இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் கமல் கடைசியாக தொகுத்து வழங்கும் எபிசோடு என கூறப்படுகின்றது. இதனையடுத்து கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது தொகுத்து வழங்கிய ரம்யாகிருஷ்ணன்தான் இனிமேல் தொகுத்து வழங்க போகிறாராம். அடுத்த சீசனில் சிலம்பரசன் சிம்பு தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளிவரவில்லை.