Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… கவர்ச்சி புயலுக்கு இந்த தமிழ் நடிகர் தான் பிடிக்குமா?….. யாருப்பா அந்த சூப்பர் மாஸ் ஹீரோ…..!!!!!

நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் டிரைக்டர் ஜெயமுருகன் இயக்கத்தில் “தீ இவன்” படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம்புலி, ஜான் விஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில் “தீ இவன்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற சன்னிலியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பான தன் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் தென் இந்தியாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்..? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சன்னிலியோன் எனக்கு நடிகர் ரஜினிகாந்தை ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். அத்துடன் எந்த மொழியாக இருப்பினும் நல்ல கதையும், கதாபாத்திரமும் இருந்தால் நடிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |