Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது…..? “சிராஜூதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்குதாம்”…. தீபா தற்கொலை வழக்கில் புதிய தகவல்….!!!!!!

தீபா தற்கொலை வழக்கில் அவரின் காதலரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் தீபா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து தீபாவை காதலித்து வந்த உதவி இயக்குனர் சிராஜுதீன் என்பவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

இறப்பதற்கு முன்பாக சிராஜுதீனிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசி உள்ளார் தீபா. மேலும் அவரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் சிராஜுதீன் தன் நண்பரான பிரபாகரனிடம் விஷயத்தை கூறி தீபா வீட்டிற்கு செல்லுமாறு கூறியிருக்கின்றார். தீபாவின் வீட்டிற்கு பிரபாகரன் ஓடி வந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள். சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது. தீபா விவகாரம் தொடர்பாக சிராஜுதீன் மற்றும் பிரபாகரினிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தீபாவுக்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |