Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது? சுந்தர் சி படம் தள்ளி போக இதுதான் காரணமா….? உண்மையை போட்டுடைத்த குஷ்பூ…!!!

எஸ். எஸ். சக்திவேல் இயக்கத்தில் ராஜாத்தி, பாண்டியன், ஆரா மற்றும் கோவை சரளா நடித்துள்ள “ஒன்வே” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குஷ்பு நிகழ்வு முடிந்த பின் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது, “ஒவ்வொருவருடைய பார்வையையும் பொறுத்தது வெற்றிமாறன் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை.

இதனை அடுத்து பொன்னியின் செல்வனையும், பாகுபலி ஒப்பிடுவது பற்றி கேட்கப்பட்டபோது தமிழ் படம் தெலுங்கு படம் என நாம் பார்க்க வேண்டாம். அது ஒரு இந்திய படம் ஒரு தமிழராக இப்படியான ஒரு வரலாற்று பதிவு செய்தது நாம் பெருமைப்பட வேண்டும் படத்தை கேலி செய்பவர்கள் மீம்ஸ் போடுபவர்கள் பற்றி கவலைப்படக்கூடாது. மணிரத்தினம் ஒரு படம் செய்கின்றார் என்றால் அதைப்பற்றி ஆராயாமல் செய்ய மாட்டார். இந்தப் படத்தில் குறைகள் இருக்கின்றது என சொல்பவர்கள் வரலாற்றைப் படித்து விட்டு வந்து பேசுங்கள். வாரிசு படத்தில் சூட்டிங் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் நடந்தது. அதனால் அங்கு சென்றேன் அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் தான் வெளியே வந்தது.

மற்றபடி வாரிசு படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. காபி வித் காதல் படம் ஒரு ஃபீல் குட் படமாக குடும்பங்கள் ரசிக்கும் படியும் உருவாகி இருக்கின்றது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள்  இன்னும் முடியவில்லை. எனவே படத்தை  போஸ்பான்ட் செய்து அடுத்த மாதம் வெளியிட இருக்கின்றோம். மற்றபடி பொன்னியின் செல்வனுக்கும், காபி வித் காதல் படத்தின் தாமதத்திற்கும் சம்பந்தமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |