சூரி தான் நடத்தும் அம்மன் ஹோட்டல் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவர் தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூரி மதுரையில் நடத்தி வரும் அம்மன் உணவகங்களில் ரைடு நடைபெற்றது.
இதன் பின்னர் மூன்று நாட்களில் அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் விளக்கம் அளிப்பதோடு விடுபட்ட ஆவணங்களை காட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து சூரி பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மன் ஹோட்டலை நடத்துவதால் தினமும் 25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகின்றது. ஆனால் அங்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்.