அம்ரிதா ஐயருக்கு திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார் ரைசா வில்சன்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றலாக நடித்து பிரபலமானார் அம்ரிதா ஐயர். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண கோலத்தில் மாப்பிள்ளை அருகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்தவர்கள் திடீர் திருமணம் நடந்து விட்டதா என பேச ஆரம்பித்தார்கள்.
இதற்கு நடிகை ரைசா வில்சனும் திருமண வாழ்த்து கூறி பதிவிட்டிருந்தார். மேலும் ரசிகர்கள் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருகின்றது. அவசரப்பட வேண்டாம் அம்மு என கூறினார்கள். இந்நிலையில் அம்ரிதா இது என் திருமண புகைப்படங்கள் இல்லை. வணக்கம் டா மாப்பிள திரைப்படத்தின் போது எடுத்த புகைப்படங்கள் என கூறி பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CiCfo_GsL3n/?utm_source=ig_embed&ig_rid=96187391-bcc5-47ed-8e4e-d648fd066a08