Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்யம்மா?…. இரவில் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கொடுத்த டாஸ்கின் படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரம் ஆகிய நான்கு பேரையும் வீட்டிற்கு வெளியில் இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் ரச்சித்தா மட்டும் சீக்கிரமாக எழுந்து விட்டார். வெளியே வந்த ரச்சிதாவிடம் வெளியே படுத்திருந்த நான்கு பேரும் ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்னவிட்டீர்கள் என்று கேட்டு உள்ளார்கள்.

அதற்கு ரச்சித்தா என்னால் தூங்க முடியவில்லை. தூங்கும் போது திடீரென சத்தங்கள் வருகிறது. ஜி.பி. முத்து அண்ணா சிரிப்பது போல் சத்தம் கேட்டது, எழுந்து பார்த்தேன் அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அதனைப் போல மற்றவர்களின் சத்தமும் கேட்டது. மீண்டும் எழுந்து பார்த்தேன், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்ட நிவா,குயின்ஸி ஜனனி மற்றும் விக்ரம் ஆகியோர் சற்று பதறிப்போனார்கள். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் உலா வருகின்ற நிலையில் ரச்சிதா இப்படி கூறியுள்ளது, அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |