பிக்பாஸ் போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகின்றார்.
ஆனால் அவ்வப்போது போட்டியாளர்கள் குறித்த செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல தொகுப்பாளர் விஜே மகேஸ்வரி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் பிக்பாஸில் நுழைய இருப்பதால் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இந்த சீசனில் டாக் ஆஃப் தி போட்டியாளராக அவர் இருப்பார் என சொல்லப்படுகின்றது. போட்டியாளர்கள் பெயர் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்கின்றது.