பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் காதலிப்பதாக செய்தி பரவி வருகின்றது.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர்.
இந்த நிலையில் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ், சலார், பிராஜக்டே கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பிரபாஸ் மற்றும் திரைப்படத்தின் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அவ்விழாவில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி இருவரின் வீடியோக்களை சில ரசிகர்கள் பதிவிட்டு இருவரும் காதலில் இருப்பதாக பரப்பி வருகின்றார்கள். பிரபாசை காதலுடன் கீர்த்தி பார்க்கிறார் எனவும் வெட்கத்தில் பிரபாஸ் தவிக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஆதிபுருஷ் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் காதலர்கள் என்ற செய்தி பரவ ஆரம்பித்துள்ளது.