இயக்குனர் விக்னேஷ் சிவன், தல தோனியை வைத்து இயக்கப் போவதாக இணையத்தில் புகைப் படத்துடன் வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இந்திய கிரிக்கெட் வீரரான தல தோனியின் தீவிர ரசிகர். தோனியை சந்திக்க வேண்டும் என எண்ணியவர் விக்னேஷ் சிவன். இவர் தோனியை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடனான புகைப்படத்தோடு தோனியை விரைவில் இயக்கப்போவதாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CaMJSb8P7N1/?utm_source=ig_web_button_share_sheet
இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு நல்ல நேரம்தான், கலக்குங்க விக்கி என பல வித பாசிட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். தல அஜீத் குமாரை வைத்து படம் இயக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் நீண்ட நாளாக எண்ணியிருந்த நிலையில், தற்போது கிரிக்கெட் வீரரான தல தோனி இயக்கவுள்ளார். இவர் தற்போது நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோரை வைத்து காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.