வினோத் கண்ணா சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் புதிது போல இளமையாகவே இருக்கிறது.
இந்திய சினிமா உலகில் 1970களில் கலக்கிக் கொண்டிருந்தவர் வினோத் கண்ணா. ஆக்சன் ஹீரோவாக வளம் வந்த இவர் சென்ற 2017 ஆம் வருடம் தன்னுடைய 71 வது வயதில் காலமானார். இவருடைய சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் இளமையாக உள்ளது. இளம் வயதில் அவருக்கு இருந்த காதல் கதைகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். இவர் உச்ச நடிகராக இருந்த நேரத்தில் பஞ்சாபி நடிகை அமிர்தா சிங்குடன் காதல் கிசு கிசுக்கள் வர ஆரம்பித்தது. இதுதான் இவரின் முதல் காதல் கதை. அம்ரிதா சிங்கும் வினோத் கண்ணாவும் பத்வாரா திரைப்படத்தில் தான் முதன் முதலில் சந்தித்தார்கள்.
அந்த நேரத்தில் அம்ரித்தா சிங்கும் ரவி சாஸ்திரியும் காதலில் இருந்தார்கள். அப்போது அம்ரித்தா சிங்கும் வினோத் கண்ணாவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ரவி சாஸ்திரிக்கும் அம்ரித்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட அமிர்தா மீது வினோத் கண்ணாவுக்கு காதல் வந்தது. அம்ரிதா சிங்குக்கும் ரவி சாஸ்திரிக்கும் இந்த இரண்டு காதல் கதைகளாலேயே இன்னும் நிறைய நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் இவர்களுடைய நிச்சயதார்த்தமும் திருமணமும் நின்றது. இருவரும் ஒருவருடைய காதலை மற்றவர் உணர்ந்து கொண்ட பின் இருவரும் காதலை பரிமாறிக் கொண்டார்கள்.
இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் உள்ளது. இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் தீவிரமாக திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். இருவரும் தீவிரமாக திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது அமிர்தாவின் அம்மா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வயது வித்தியாசம், வேறு மதம் என பல காரணங்களைச் சொல்லி இத்திருமணத்தை அவரின் அம்மா நிறுத்திவிட்டார். இதன் பின்னர் இஸ்லாமிய மருமகனை தேடி திருமணம் செய்து வைத்தார். வினோத் கண்ணாவின் முதல் திருமணமும் ஒரு காதல் கதை தான். இவர் தன்னுடைய கல்லூரி காலத்தில் கல்லூரி நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்க வந்த மாடலான கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 45 வயதுக்கு மேல் கவிதா என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.