கடன் தொந்தரவால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு செந்தில் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது உறவினர்கள் செந்திலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விட்டனர். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த இயலாததால் தன் வாழ்வதைவிட இறந்து விடுவதே மேல் என செந்தில் வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் செந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று செந்திலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.