Categories
சினிமா தமிழ் சினிமா

என்னால இது முடியாது…. “புது பட ஷூட்டிங்கை கேன்சல் செய்த சிவாங்கி”….!!!!!!

சிவாங்கி தனது திரைப்படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டதாக செய்தி வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதால் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. இவர் நடிப்பில் அண்மையில் டான் திரைப்படம் வெளியானது.

இதையடுத்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்தில் சிவாங்கி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சிவாங்கியின் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என யூடியூப் சேனல் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், சிவாங்கி பாடகர் என்பதை தாண்டி தற்பொழுது நடிகையாகவும் நடந்து கொண்டிருக்கின்றார். சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றது. இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய குணங்கள் சரியில்லாததால் அவருடைய சீனை எல்லாம் இயக்குனர் படத்தில் இருந்து நீக்கி காட்டி இருப்பார்.

அது மட்டுமில்லாமல் புது இயக்குனர் ஒருவருடைய திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் சிவாங்கி. அந்த படத்தில் மேக்கப் ஆர்டிஸ்ட் டிரஸ் எல்லாம் இவர்களை எடுத்துக்கொண்டு போய் ஒரு நாளைக்கு 14,000 ரூபாய் பில் தருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் என்னுடைய திரைப்படத்தை பற்றி பேசிவிட்டு திரைப்படத்தின் காஸ்டிங் குறித்து எல்லாம் பேசணும் வாருங்கள் என சொல்லி இருக்கின்றார். ஆனால் சிவாங்கி நேரடியாக ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். பின் அவரிடம் காஸ்டியூம் டிரஸ் எல்லாம் காண்பித்து நடிக்கச் சொன்னதுக்கு இவ்வளவு விலை குறைவான டிரஸ் போட முடியாது. எனக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் மதிப்புள்ள துணியாவது வேண்டும். என்னால் முடியாது என்று சொல்லி சென்று விட்டார். இதனால் அந்த ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டது. வளர்ந்த பிறகு தான் நடிகர்கள் இப்படி செய்வார்கள். ஆனால் இவர் வளரும்போதே இப்படி செய்வது மிகவும் தவறு. சிவாங்கி தனது குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என பலரும் கேலி செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |