Categories
தேசிய செய்திகள்

“என்னால இத தாங்கிக்கவே முடியல”…. ஆத்திரத்தில் விவசாயி செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திராவில் தொடர்ந்து வெங்காயத்தின் விலை குறைந்து கொண்டே வருவதால் கர்னூல் மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயத்தை ஒரு விவசாயி தீ வைத்து கொளுத்தியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் வெங்காய வர்த்தகத்திற்கு மிகப்பெரிய சந்தையாக கர்னூல் வெங்காயச்சந்தை விளங்கிவருகிறது.இந்த சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வருவது மட்டுமல்லாமல் கர்னூல் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் இங்கு வெங்காயத்தைக் கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி, கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்க கிராமத்தைச் சேர்ந்த வெங்காய விவசாயியான வெங்கடேஷ்வரலு என்பவர் அவர் விளைவித்த 50 கிலோ எடைகொண்ட 25 வெங்காய மூட்டைகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்.அப்போது அவர் கொண்டுவந்த வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு 400 ரூபாயாக மட்டுமே போகும் என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி, விளைபொருள்கள் முதலீடு மற்றும் சந்தைக்கு கொண்டு வந்தது, போக்குவரத்து செலவு என கட்டுப்படியாகாது என்று கூறிவிட்டு, வெங்காயம் அனைத்தையும் கீழே கொட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

சக விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அதை தடுக்க முயன்றபோதிலும், அதனை ஏற்றுக்கொள்ளாத வெங்கடேஸ்வரலு வெங்காயத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்.மேலும் வெங்காயத்திற்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அந்த வெங்காய சந்தையின் அதிகாரி விஜயலட்சுமி பேசுகையில், பல இடங்களில் பெய்த தொடர் மழையால் வெங்காயம் சேதமடைந்து இருப்பதாகவும், அதனால் இந்த வெங்காயம் ஏற்றுமதிக்கு சேமிப்பதற்கும் ஏற்றதல்ல. மேலும் தெலுங்கானா, கர்நாடகா ஒடிசா, மகாராஷ்டிராவிலிருந்து வந்த சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே கர்னூல் வெங்காயத்திற்கான தேவையும் குறைந்துள்ளது. ஒரு சில விவசாயிகள் நல்ல தரமான வெங்காயத்தை உள்ளூரில் விற்பனை செய்துவிட்டு, தரம் குறைந்த வெங்காயங்களை சந்தைக்கு கொண்டு வருவதாகவும், குறைந்தபட்சம் 400 ரூபாய் 1,800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப் பட்டதாகவும், 3000 குவிண்டால் வெங்காயம் வந்த நிலையில் அதில் 50% தரம் குறைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தரம் குறைந்துள்ளதால் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும் தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் கிலோ 2 ரூபாய்க்கு கூட வரக்கூடும் என அங்கிருந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறும்போது 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை என பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |