உத்தரப் பிரதேச மாநிலம் அலிக்ரா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தன் மனைவி குளிக்காத காரணத்தினால் விவாகரத்து செய்வதாக முத்தலாக் கூறி வரும் விவகாரமானது தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. அலிக்ரா பகுதியிலுள்ள இஸ்லாமிய பெண் ஒருவரின் சார்பில் அப்பகுதி மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் புகார் ஒன்று வந்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “என் கணவர் வலுக்கட்டாயமாக விவாகரத்து கொடுக்குமாறு கூறுகிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்புகாரை அடுத்து அப்பெண்ணை விசாரித்ததில், கணவருடன் வாழ விரும்புவதாகவும், தங்களின் ஒரு வயது குழந்தையின் எதிர்காலத்தை கருதி அவருடன் சேர்ந்து வாழ அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்பின் கணவரை அழைத்து விசாரித்த நிலையில், எனது மனைவியுடன் எனக்கு வாழ விருப்பமில்லை. அதனால் விவாகரத்து தர வேண்டுமெனவும், என் மனைவி தினமும் குளிக்காததால் எங்களுக்குள் தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாகி விடுகிறது.
இதனை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என கூறியுள்ளார். இதனையடுத்து அவ்விருவருக்கும் காவல் துறையினர் அறிவுரை கூறியும், இப்பிரச்சனையை குறித்து வழக்கு பதிவு செய்ய இயலாது என அனுப்பி வைக்கப்பட்டனர்.