Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்னால முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… வேதனை பட்ட மோடி….!!

இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மங்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் மனதின் குரல் எனப்படும் மங்கி  பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோடை நெருங்குவதால் மக்கள் மழை நீரை சேமிக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை
சுத்தப்படுத்தி முறையாக தூர் வாருவதன் மூலம் அதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி உலகில் உள்ள மொழிகளில் மிகத் தொன்மையான மொழி தமிழ் என்றும், தமிழ் மொழியை தன்னால் கற்றுக் கொள்ள முடியாதது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார் .

Categories

Tech |