கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் கிரேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் பி.ஏ 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் அதிகம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிரேசியின் இடது காலில் அடிபட்டுள்ளது. இதனால் காயமடைந்த கிரேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கைப்பந்து விளையாட முடியாமல் போனதால் மன உளைச்சலில் இருந்த கிரேசி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.