அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ‘ஹாஸ்டல்’ படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சதீஷ், முனிஸ்காந்த், நாசர், கலக்கப்போவது யாரு யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாபோ சசி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Link ——> https://t.co/Rk7qTc0eUt #HostelTeaser pic.twitter.com/xPpdthpMiI
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 16, 2021
இந்நிலையில் ஹாஸ்டல் படத்தின் செம ரகளையான டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் நடிகை பிரியா பவானி சங்கர் பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என அசோக் செல்வனிடம் உதவி கேட்கிறார். ஹாஸ்டலுக்குள் சென்றவுடன் பிரியா பவானி சங்கர் செம கலாட்டாகள் செய்ய இறுதியில் பேய் வருவது போல் டீசர் முடிவடைகிறது . விரைவில் இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.