பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/Losliyaofficial/status/1385916846440808450
மேலும் இவர் பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் இணைந்து கூகுள் கட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு அழகிய காதல் பாட்டுக்கு லாஸ்லியா சிரித்தபடி நடனமாடி அசத்தியுள்ளார். தற்போது ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.