Categories
பல்சுவை

என்னா கோபம்!…. காரை வைத்து கால்பந்து ஆடிய காளை…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!!!

காளை கால்பந்தாட்டம் போன்று காரை தூக்கியடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால் காளை ஏதோ ஒரு கோபத்தில் காரை தூக்கியடிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தன் கோபம் முழுவதையும் அந்த காளை காரின் மீது இறக்கிவிட்டது போல தெரிகிறது. அதாவது முதலாவதாக காரை நெருங்கிய காளை தன் கொம்பினால் அதனை காற்றில் வீசியது.

 

 

View this post on Instagram

 

A post shared by Animal Power (@animals_powers)

இவ்வாறு பல முறை செய்த காளை காரை வலுவாக தாக்கவும் செய்தது. கடைசியில் அந்த காளை காரை முழுவதும் நாசம் செய்தது. இதற்கிடையில் பல பேர் காளையை விரட்ட முயற்சி செய்தும் அது காரை விடுவதாக இல்லை. அதன்பின் கடும் முயற்சிக்கு பின் அங்கிருந்தவர்கள் அந்த காளையை அங்கிருந்து விரட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. காளையின் கோபத்தையும் பலத்தையும் பார்த்து அதிர்ந்துபோன இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.

Categories

Tech |