Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா ஸ்பீடு!…. விறுவிறுப்புடன் நடக்கும் நடிகர் சூர்யா படத்தின் சூட்டிங்…. வெளியான புது அப்டேட்….!!!!

நடிகர் சூர்யாவின் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் சூர்யா, திஷா பட்டானி போன்றோர் பங்கேற்றனர். சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளால் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அத்துடன் சூர்யா தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக செட் அமைத்து நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்போது சூர்யா சென்னைக்கு திரும்பி இருப்பதாக தகவல் வந்துள்ளது. மிகப் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது கோலிவுட் வட்டாரங்களில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது .

Categories

Tech |