நடிகர் சிம்பு சினிமாவில் சகலமும் கற்ற வல்லவனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவில் இருப்பவர். இந்த நிலையில் நடிகை சந்தியா சிம்பு என்னிடம் சொன்ன கதை வேற ஆனால் எடுத்த கதை வேறு என வல்லவன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஓப்பனாக பேசியிருக்கின்றார். சினிமாவில் எத்தனை துறைகள் இருக்கின்றதோ அத்தனை பற்றியும் அக்குவேறு ஆணிவேராக அறிந்தவர் நடிகர் சிம்பு.
சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தது முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். வெற்றி தோல்வி என அனைத்தையும் மாறி மாறி சந்தித்து வரும் சிம்பு சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் என்ற படம் சிம்பு இயக்கி நடித்து இருப்பார். சிம்பு, நயன்தாரா, ரீமாசென், சந்தானம், பிரேம்ஜி, அமரன் என பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை சந்தியா.
மலையாள நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே நேச்சுரலாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சந்தியா அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து வந்திருக்கிறார். வல்லவன் படத்தில் சிம்புவுக்கு தோழியாக நடித்து அனைவரது மனங்களையும் வென்றிருக்கிறார். இதனையடுத்து திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கின்றார். இந்த நிலையில் சந்தியா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணலில் வல்லவன் படத்தில் நடித்தது பற்றி ஓபனாக பேசியிருக்கிறார்.
சிம்பு நடித்த வல்லவன் 2006 ஆம் ஆண்டு வெளியானது. நட்பு, காதல் என இரண்டுமே மிக அழகாக கூறி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வல்லவன் படத்தில் நடிப்பதற்காக அவர்கள் சொன்ன கதையை எடுக்கல. வீட்டில் வந்து அவர்கள் சொன்ன கதை வேறு அதை அப்படியே படப்பிடிப்புக்கு செல்லும்போது மாறி இருக்கின்றது.
அப்புறம் படம் வெளியாகும்போது கம்ப்ளீட்டா வேற மாதிரி கதையில ரிலீஸ் ஆச்சு. வல்லவன் கதை என் கிட்ட சொன்னத சொன்னா நீங்க அது வேற மாதிரி இருக்குன்னு சொல்லுவீங்க என நடிகை சந்தியா வல்லவன் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட கதை வேறு, ஆனால் நடித்த கதை வேறு என பகீர் தகவலை யூடியூப் சேனலில் நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.