Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடன் நடிக்க பயப்படுதாங்க!…. காரணம் இதுதான்?… பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்….!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் அண்மை காலமாக அரசியல் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்ததாவது ”அண்மை காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

ஏனெனில் நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிப்பதற்கு பயப்படுகின்றனர். அத்துடன் என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ எனும் அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. அந்த பயத்தில்தான் என்னை விட்டு அவர்கள் விலகுகின்றனர். இது என் திரைஉலகில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனிடையில் அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே உள்ளேன். தற்போது தான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். என் குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்துவிடுவேன்” என்று பேசினார்.

Categories

Tech |