Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னுடன் வா….. வாலிபரின் வெறி செயல் …. நிதிபதியின் அதிரடி உத்தரவு ….!!

மாணவியை கடத்திச் சென்ற  நபருக்கு  17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் ஞானகுரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 18.5.2016-ல் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனையடுத்து  மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஞானகுருவை கைது செய்து  மாணவியை மீட்டுள்ளனர். இந்த  வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்  நீதிபதி தனசேகரன் மாணவியை கடத்தி சென்ற ஞானகுருக்கு  17 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அவதாரம் விரித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்

Categories

Tech |