Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி?”… ப. சிதம்பரம் அதிரடி கேள்வி…!!!

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் என்ன நன்மை என்று முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா என ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் வரை பாஜக முளைக்காது, குறைக்கவும் விடமாட்டோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை என்று முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பிய அவர், சசிகலா வெளியே வந்தால் அமமுக உயிர்த்தெழும் என்கிறார்கள். அதிமுகவும் 4 ஆக உடைய அதிக வாய்ப்புள்ளதாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |