Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னுடைய ஓவரில்….. “அந்த சிக்ஸரை கோலியை தவிர யாராலும் அடித்திருக்க முடியாது”…. அதுதான் கிளாஸ்…. கோலியை புகழ்ந்த பாக்., பவுலர்..!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பரபரப்பான இந்திய வெற்றியின் போது அந்த 2 சிக்ஸர்களை விராட் கோலியை தவிர உலக கிரிக்கெட்டில் எந்த வீரரும் அடித்திருக்க முடியாது என ஹாரிஸ் ரவூப் நம்புகிறார்.

2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக, பரபரப்பாக கடைசி வரை சென்றது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 159 ரன்கள் குவித்தது. இதையடுத்து 160 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிகொண்டிருந்த நேரத்தில், ஹர்திக் பாண்டியாவுடன் கைகோர்த்து விராட் கோலி கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்றார். கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டபோது. 19ஆவது ஓவரை ஹாரிஸ் ரவூப் வீசுகிறார்.

அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைக்க, 5ஆவது பந்தை பேக் புட்டில் வந்து நேராக  சிக்சர் அடித்தார் விராட் கோலி. அதைத் தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்திலும் லெகே சைடு திசையிலும் பிலிக் செய்து சிக்ஸர் அடித்தார். இதனால் கடைசி வரி 16 ரன்கள் தேவைப்பட, இந்திய அணி அசத்தலாக திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்தியா பக்கம் திரும்ப 19ஆவது ஓவரில் கோலி அடித்த அந்த 2 சிக்ஸர் தான்.

அந்த ஷாட் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. அந்த ஷாட்டை கோலியை தவிர யாராலும் அடிக்க முடியாது சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் புகழ்ந்தனர். குறிப்பாக பிரஷரான நேரத்தில் 5ஆவது பந்தை விராட் கோலி நேராக அடித்த சிக்ஸ் எல்லாம் அவ்வளவு எளிதில் அடித்திருக்க முடியாது.. அது ஒரு மறக்க முடியாத இன்னிங்க்ஸ் என்றே சொல்லலாம். கோலி ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ரவூஃப், ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் தனது பந்துவீச்சில் அப்படி சிக்ஸ் அடித்திருந்தால், நான் “காயப்பட்டிருப்பேன் என்றும், விராட் கோலியை தவிர உலக கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் அந்த ஷாட்டை அடித்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இணையதளம் ஒன்றில் முதன்முறையாக பேசிய ஹாரிஸ் ரவூஃப், “உலகக் கோப்பையில் அவர் (கோலி) விளையாடிய விதம், அது அவருடைய கிளாஸ் , அவர் விளையாடும் ஷாட்களின் வகைகள் அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் அந்த சிக்ஸர்களை அடித்த விதம், எனது பந்துவீச்சில் அந்த ஷாட்களை வேறு எந்த வீரராலும் அடிக்க முடியாது என்று நினைக்கிறேன். தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால், நான் வருத்தப்பட்டிருப்பேன், ஆனால் அவை கோலியின் பேட்டில் இருந்து வந்தன, அவர் முற்றிலும் வேறுபட்ட கிளாஸ் பிளேயர், அதுதான் அவருக்கும், மற்றவர்களுக்கும் ஆட்ட தரத்தில் இருக்கும் வித்தியாசம். எனது திட்டமும் செயல்படுத்துதலும் நன்றாக இருந்தது. ஆனால் அந்த ஷாட் அனைத்தும் தரமானதாக இருந்தது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாருங்கள், இந்தியாவுக்கு கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது. நான் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தேன். கடைசி ஓவரில் நவாஸ் வீசுவது எனக்குத் தெரியும், அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர், நான் அவருக்கு குறைந்தபட்சம் 4 பெரிய பவுண்டரிகளை விட முயற்சித்தேன். அதாவது குறைந்த பட்சம் கடைசி ஓவரில் 20 ரன்களுக்கு மேல் வெற்றிக்கு இருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அதனை கோலி மாற்றிவிட்டார் என்றார்.

மேலும் 2018-19 தொடரின் போது சிட்னியில் (SCGயில்) இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடியபோது, நானும்  சிட்னியில் கிரேடு 1 கிளப் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன், அப்போது நான் வலைப்பயிற்சியில் இந்திய அணிக்கு பந்து வீசினேன். விராட் கோலி, கே.எல். ராகுல், ரவி சாஸ்திரி, அவர்கள் எப்போதும் என்னை மிகவும் அரவணைப்புடன் சந்தித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பு உற்சாகத்தை தந்தது. உண்மையில், உலகக் கோப்பையின் போது ரவி சாஸ்திரி என்னிடம் கூறினார். எனது வெற்றி மற்றும் மாற்றத்தைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது நீங்கள் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கோலி தன்னை பாராட்டியதாகவும் கூறினார்..

https://twitter.com/AkshatOM10/status/1597990850172452868

Categories

Tech |