பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு ‘மாட்னியா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் சிவானி ஆரியிடம் இந்த வீட்டில் யார் டி மோட்டிவேட்டாக இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கேட்க அனிதாவின் பெயரை கூறுகிறார் ஆரி.
#Day78 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/A3tZwOOJTH
— Vijay Television (@vijaytelevision) December 21, 2020
இதற்கு சில காரணங்களை ஆரி கூறிக் கொண்டிருக்கும் போது திடீரென ஆவேசப்பட்ட அனிதா என்னுடைய அம்மா, அப்பா ,கணவர் பற்றி பேச வேண்டாம் என்கிறார். பின்னர் ‘நான் பேசி முடித்தவுடன் சொல்கிறேன்’ என்று ஆரி கூற, உரத்த குரலில் கையை நீட்டி மிக ஆவேசமாக ஹஸ்பன்ட் பத்தி பேசாதீங்க ஆரி என்கிறார் அனிதா . இதிலிருந்து ஆரி, அனிதா இடையே கண்டிப்பாக ஒரு மோதல் வெடிக்கும் என்று தெரிகிறது.